ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 11 அமைச்சர்கள் உட்பட 31 பேர் கொண்ட குழுவை களமிறக்கும் திமுக!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 11 அமைச்சர்கள் உட்பட 31 பேர் கொண்ட குழுவை களமிறக்கும் திமுக!

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 11 அமைச்சர்கள், 7 எம்.எல்.ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ளடக்கிய 31 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடைபெறவிருக்கின்ற ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பின்வருமாறு அமைக்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழு விவரம் பின்வருமாறு:-

கே.என்.நேரு, எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ், கோவை நா. கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி, க.வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன், சேலம் ஆர். ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், என். நல்லசிவம், இல. பத்மநாபன், பா.மு.முபாரக், தே.மதியழகன், கே ஆர்.என் ராஜேஸ்குமார், எஸ்.எம். மதுரா செந்தில், பெ.பழனியப்பன், ஒய்.பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி.

First published:

Tags: DMK, Erode Bypoll, Erode East Constituency