• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளரை அறிவித்த திமுக!

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளரை அறிவித்த திமுக!

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளரை அறிவித்த திமுக!

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளரை அறிவித்த திமுக!

தமிழகத்தில் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவின் வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நாட்களைக் குறைத்துக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டு செப்டம்பர் 13ஆம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.

    அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் காலமானார். இதைத்தொடர்ந்து, அவரது இடத்தை நிறப்பும் வகையில் தலைமை தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது.



    இந்நிலையில், திமுக பொதுக்குழு உறுப்பினரும், வெளிநாடு வாழ் தமிழர் அணியின் இணை செயலாளருமான புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா, ராஜ்யசபா தேர்தலுக்கான திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போதைய நிலையில் சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் ராஜ்யசபா இடைத்தேர்தலில் திமுக எளிதாக வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனால் அதிமுக வேட்பாளரை அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: