மேயர் விருப்பமனு கட்டணத்தை திரும்ப பெறலாம் -திமுக அறிவிப்பு!

அண்ணா அறிவாலயம்
- News18
- Last Updated: November 22, 2019, 11:59 AM IST
மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், நகராட்சித்தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதன் மூலம் இந்த பதவிகளுக்கு நேரடித் தேர்தல் இல்லை என்பதால், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என திமுக அறிவித்துள்ளது.விருப்ப மனு கட்டணத்திற்கான ரசீதை கொடுத்து நவம்பர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மாவட்ட திமுக அலுவலகத்தில் பணத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கவுன்சிலர் பதவிக்கு நவம்பர் 27வரை விருப்பமனு தரலாம் எனவும் திமுக அறிவித்துள்ளது. முன்னதாக அதிமுகவும் விருப்பமனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என அறிவித்திருந்தது.
Also see...

Loading...
Loading...