திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை - தி.மு.க தேர்தல் வாக்குறுதி

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தி.மு.க தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட பொதுச் செயலாளர் துரைமுருகன் வாங்கிக்கொண்டார். அந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

  தி.மு.க முக்கிய வாக்குறுதிகள்:

  • பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும்.

  • இந்து ஆலயங்கள் புனரமைப்பு பணிக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

  • தமிழக ஆறுகள் மாசுபடாமல் தடுப்பதற்காக ஆறுகள் பாதுகாப்பு திட்டம் அமைக்கப்படும்.

  • செய்தியாளர்களுக்காக தனி ஆணையம் அமைக்கப்படும். அவர்களுக்கான உதவித் தொகை அதிகரிக்கப்படும்.

  • அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்
   என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதேபோல, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: