மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களாக கனிமொழி, ராஜேஷ்குமார் அறிவிப்பு!

திமுக வேட்பாளர்கள்

, தமிழ்நாடு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநில உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்டோபர் 4ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டனர். இருவரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தங்களது  மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து  2 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.

  இதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் காலியாக உள்ள மாநிலங்களவை  உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, தமிழ்நாடு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

  இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளின் சுவரொட்டி, பேனர்கள் அகற்றம்


   இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்கி இம்மாதம் 22ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி,  டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ் குமார்


  டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு  திமுகவின் மருத்துவர் அணி மாநில செயலாளராக உள்ளார். இவரது தந்தை என்.வி.என்.சோமு திமுக சார்பில்  1984, 1996 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கனிமொழியின் தாத்தா  என். வி. நடராஜன் , திமுகவை தொடங்கிய தலைவர்களுள் ஒருவர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: