முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு - திமுக அறிவிப்பு

திருச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு - திமுக அறிவிப்பு

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

  • Last Updated :

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக பிரதிநிதிகளுக்கான மாநாடு திருச்சியில் வரும் 31-ம் தேதி நடக்கும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு, திருச்சியில் வரும் 31-ம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் சார்பில் தேர்வான மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் தங்களது மாவட்ட செயலாளர்களை அணுகி, உரிய அனுமதியை பெற்று மாநாட்டில் கலந்துகொள்ள திமுக தலைமை கோரிக்கை விடுத்துள்ளது.

top videos

    First published:

    Tags: DMK, Local Body Election 2019