விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் முதல் 8 தொகுதிகள் வரையில் கேட்டது...

  • Share this:
திமுக- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே இன்று மதியம் 12 மணியளவில் இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாகக் காணப்படுகின்றது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் இறுதி முடிவு வெளியாகும் என் எதிர்பார்க்கப் படுகின்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் முதல் 8 தொகுதிகள் வரையில் கேட்டதாகவும் ஆனால், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், 4 தனித் தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளும் என 6 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த எண்ணிக்கைணில் ஓரிரண்டு தொகுதிகள் முன் பின் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Must Read: மு.க.ஸ்டாலின் 6ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்: எங்கே... எப்போது?

 

இன்று மதியம் 12 மணி அளவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: