Home /News /tamil-nadu /

“பிரிக்க முடியாதது எது? திமுகவும் மின்வெட்டும்!” திருவிளையாடல் பட டயலாக்கால் கிண்டலடித்த நத்தம் விஸ்வநாதன்!

“பிரிக்க முடியாதது எது? திமுகவும் மின்வெட்டும்!” திருவிளையாடல் பட டயலாக்கால் கிண்டலடித்த நத்தம் விஸ்வநாதன்!

 நத்தம் விஸ்வநாதன்!

நத்தம் விஸ்வநாதன்!

நீட் தேர்வில் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு மாணவர்களின் வருங்கால வாழ்க்கையில் சூனியமான ஆபத்தான போக்கை  கையாளுகிறது என்று நத்தம் விஸ்வநாதன் குற்றம்  சாட்டினார். 

 • 2 minute read
 • Last Updated :
  தமிழகத்தில் மின்வெட்டுக்கு காரணம் மின்துறை அமைச்சரின் மின் துறை பற்றிய புரிதல் இல்லாதது தான் எனவும் திமுகவையும் மின்வெட்டையும் பிரிக்கமுடியாது என்று முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

  திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விசுவநாதன் வெற்றி பெற்றார்.  இந்நிலையில்  நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் இன்று திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில்  அதிமுக தொண்டர்கள் சமூக இடைவெளி இன்றி திரளாக கலந்து கொண்டனர்.

  அப்போது பத்திரிக்கையாளார்கலுக்கு பேட்டி அளித்த நத்தம் விசுவநாதன், "தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் மின் வெட்டுக்கு காரணம் மின்துறை அமைச்சருக்கு அத்துறையைப் பற்றி முழுமையாக புரிதல் இல்லாததுதான்.  மின்வெட்டை தீர்க்க  முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மின்வெட்டும் வந்துவிடும்..

  திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது எது என்பதுபோல் திமுகவும் மின்வெட்டும் தான். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து மின்வெட்டும் வந்துவிடும். இது ஒரு ராசிபோல தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பராமரிப்புகளை நான்கு தினங்களில் சரிசெய்துவிடலாம். ஆனால் இப்போது திமுக ஆட்சி சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் முன்பு திமுக ஆட்சியில் மின்வெட்டு  இருந்தது போல அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

  Also Read:  ATM கொள்ளை பற்றிய புதிய தகவல்கள்.. விமானத்தில் வந்து கூகுள் மேப் பார்த்து கொள்ளையடித்தது அம்பலம்!

  மின்வெட்டுக்கு இன்றைய ஆட்சியில், அற்ப சொற்ப  காரணங்களை கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட ஒழுங்கு  கெட்டுவிடும்.  அதேபோல் திமுகவையும்  அராஜகத்தையும் பிரிக்க முடியாது. திமுகவிற்கு என ஒரு கலாச்சாரம் உள்ளது, அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் என இருக்கும்.

  நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதற்கு அதிமுக எடுத்த யுக்திகளும் வியூகங்களுமே காரணம்.    அது அவர்களுக்கு சாதகமாக மாறி விட்டது அதிமுகவை மக்கள் வெறுத்து ஒதுக்கவும் இல்லை . திமுகவை விரும்பி ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

  Also Read:   நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உட்பட 3 பேர் மீது ஆசிட் வீச்சு : கணவர் வெறிச்செயல்!!

  திமுக ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்தே  என்றும்  தவறு என்றும் வெளிப்படையாக ஒப்புக் கொள்வதாகவும் தேர்தல் நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி எறிந்தனர் ஆனால்  தமிழகத்தில் சில கோரிக்கைகள்  நிறைவேற்றி இருப்பதாகவும் முக்கியமான கோரிக்கையான பெண்களுக்கு நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் ஆகியவை கவர்ணர் உரையில் இடம் பெறவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கூட்டுறவு துறையில் 5 பவுன் நகை தள்ளுபடி மற்றும் நீட் தேர்வு ரத்து பற்றியும் எவ்வித அறிவிப்பும் இல்லை.  நீட் தேர்வில் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு மாணவர்களின் வருங்கால வாழ்க்கையில் சூனியமான ஆபத்தான போக்கை  கையாளுகிறது என்று நத்தம் விஸ்வநாதன் குற்றம்  சாட்டினார்.

  திண்டுக்கல் செய்தியாளர் சங்கர்
  Published by:Arun
  First published:

  Tags: ADMK, Chennai power cut, DMK, Electricity, Natham, Natham Constituency, Power cut

  அடுத்த செய்தி