முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி - சி.வி.சண்முகம் பேச்சால் பரபரப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி - சி.வி.சண்முகம் பேச்சால் பரபரப்பு

சி வி சண்முகம்

சி வி சண்முகம்

மத்திய பாஜக அரசு சொல்லுகின்ற பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது என சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Neyveli, India

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக பாஜக வுடன் கூட்டணி அமையவுள்ளது உள்ளது என்றும் திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓட போகிறார்கள என்றும் நெய்வேலியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசுசைகண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிக்க :  ஆவின் பால், நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், “மத்திய பாஜக அரசு சொல்லுகின்ற பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக நிலங்களை உடனே கையபடுத்த மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது அதனை தமிழக அரசு செய்து வருகிறது.

தமிழகத்தில் திமுக அரசு மத்திய அரசை விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அய்யா அம்மா தாயே என கெஞ்சுகிறார்கள். 39 எம்.பி களும் பிச்சை எடுகிறார்கள். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி என விமர்சித்தார்.

மேலும்  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக - பாஜக கூட்டணி வர உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓட போகிறார்கள் என தெரிவித்தார்.

First published:

Tags: BJP, CV Shanmugam, DMK, DMK Alliance