மத்திய சென்னையில் அதிமுக - திமுக பணப்பட்டுவாடா - தெகலான் பாகவி குற்றச்சாட்டு

திமுக பகுதி செயளாலர் காமராஜ் மற்றும் அதிமுக பகுதி பொறுப்பாளர் கோகுல இந்திரா தலைமையில் இந்த பண விநியோகம் நடைபெறுவதாக தெகலான் பாகவி குற்றம்சாட்டினார்.

news18
Updated: April 17, 2019, 11:53 AM IST
மத்திய சென்னையில் அதிமுக - திமுக பணப்பட்டுவாடா - தெகலான் பாகவி குற்றச்சாட்டு
தெகலான் பாகவி
news18
Updated: April 17, 2019, 11:53 AM IST
மத்திய சென்னையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தெகலான் பாகவி குற்றச்சாட்டியுள்ளார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி எஸ் டி பி ஐ வேடபாளர் தெகலான் பாகவி இரவு 11 மணி அளவில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்திப்பதற்காக தலைமை செயலகம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தெகலான் பாகவி தான் போட்டியிடும் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக கூட்டணியினர் மற்றும் திமுகவினர் ஓட்டிற்காக பண விநியோகம் செய்வதாக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் அளிக்க வந்ததாகவும் அவர் இல்லாததால் அலுவலர் ஒருவரிடம் புகார் அளித்ததாகவும் கூறினார்.

திமுக பகுதி செயளாலர் காமராஜ் மற்றும் அதிமுக பகுதி பொறுப்பாளர் கோகுல இந்திரா தலைமையில் இந்த பண விநியோகம் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.

எந்த மாதிரியான ஆதாரங்கங்களுடன் இந்த புகாரை அளித்தீர்கள் என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரங்களை கண்டுபிடிக்கத்தான் தேர்தல் ஆணையமும் காவல் துறையும் உள்ளது எனக் கூறினார்.

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...