திருச்சி மாவட்டத்தில் மட்டும் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேரடியாக மோதும் திமுக, அதிமுக..

திருச்சி மாவட்டத்தில் மட்டும் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேரடியாக மோதும் திமுக, அதிமுக..

உதயசூரியன் மற்றும் இரட்டைஇலை நேரடியாக களம் காணும் திருச்சி தொகுதி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் மற்றும் இரட்டைஇலை நேரடியாக மோதுகிறது.

  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே உள்ளது. கடந்த 5 நாட்களாக ஆளும்கட்சியான அதிமுக மற்றும் திமுக தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் மேற்கொண்டது. இந்நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு மற்றும் இழுபறிக்குப் பின் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீட்டை சுமுகமாக முடித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் மொத்தம் 9 கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் அதிகபட்சமாக பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளையும், அடுத்தப்படியாக பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளையும் பெற்றுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸ்க்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய ஆறு  கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை அதிமுக ஓதுக்கியுள்ளது.

இதில் அதிமுகவினர் 178 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். 12 தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் இரட்டைஇலை சின்னம் 190 இடங்களில் போட்டியிட உள்ளது. பத்மநாதபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு மட்டும் இன்னும் அதிமுக வேட்ப்பாளரை அறிவிக்கவில்லை.

திமுக கூட்டணியில் அதிபட்சமாக காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகியவை தலா 6 தொகுதிகளிலும் போட்டியிருகின்றன. கொமதேக 3, ஐயூஎம்எல் 3, மமக 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என மொத்தம் 61 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் நிற்கின்றன.

இதில் திமுகவினர் 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். 14 தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் உதயசூரியன் சின்னம் 187 இடங்களில் போட்டியில் உள்ளது.

இந்நிலையில்  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இதில் எந்த ஒரு தொகுதியையும்  திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கவில்லை, அதிமுகவும் தனது கூட்டணி கட்சிகளுக்கு திருச்சியில் எந்த தொகுதியும் ஓதுக்காத நிலையில், இறுதியாக கூட்டணியில் சேர்ந்த தமாகவிற்கு லால்குடி சட்டப்பேரவை தொகுதி ஒதுக்கியது.

மேலும் படிக்க...முதலமைச்சர் பழனிசாமி இன்று முதல் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

தமிழ் மாநில காங்கிரஸும் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுவதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் மற்றும் இரட்டைஇலை நேரடியாக மோதுகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: