ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்“ - தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதி

“தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்“ - தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதி

தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்

தூத்துக்குடியில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. மக்கள் எங்களோடு இணக்கமாக நடந்து கொண்டனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்று தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ’தூத்துக்குடியில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. மக்கள் எங்களோடு இணக்கமாக நடந்து கொண்டனர். வாக்குச்சாவடிகளில் குளறுபடி நடந்து இருப்பதாக தி.மு.க புகார் அளித்துள்ளது அடிப்படை ஆதாரமற்றது. தோல்வி பயத்தில் அவர்கள் உளறி வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள மக்களுக்கு 200, 300 ரூபாய் பணத்தை தான் தி.மு.க, அ.ம.மு.கவினர் கொடுத்து உள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள அவர்களுக்கு இது சிறிய தொகை தான். இதை பொதுமக்களே என்னிடம் சொன்னார்கள். இன்னும் அதிகமாக அவர்களுக்கு பணம் கொடுத்திருக்கலாம் என தமிழிசை தெரிவித்தார்.

அப்படியென்றால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி கொள்வது தவறு என்பது எனது கருத்து என தமிழிசை பதிலளித்தார்.

Also Watch

First published:

Tags: BJP, Elections 2019, Lok Sabha Election 2019, Tamilisai Soundararajan, Thoothukkudi S22p36