முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

தி.வேல்முருகன்

தி.வேல்முருகன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் தங்களது ஆதரவை திமுகவிற்கு அளித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அக்கட்சியின் தலைவர் உட்பட நிர்வாகிகள் திமுக தலைமை அலுவலகத்துக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று (8.3.2021)  தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்கிறோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்திரியன் வேணுகோபால், கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக உடனான கூட்டணி குறித்து இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “எந்தப் பகுதியை எங்களுக்கு கொடுத்தாலும் எங்களுடைய ஒரே கொள்கை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் சொல்கிறார்களோ அதே தொகுதியில் போட்டியிட நாங்கள் தயார்.” என்று தெரிவித்திருந்தார்.

top videos
    First published:

    Tags: DMK Alliance, TN Assembly Election 2021, Velmurugan