தி.மு.க கூட்டணியில் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க கூட்டணியில் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

அண்ணா அறிவாலையம்

தி.மு.க கூட்டணியில் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ம.கவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவுசெய்துள்ளது. பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. தே.மு.தி.க மற்றும் பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. தி.மு.கவைப் பொறுத்தவரை ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

    அதன்தொடர்ச்சியாக தற்போது இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளது. இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கூட்டணி ஒப்பந்தத்தில் முத்தரசன் தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டார்.

    தொகுதி பங்கீட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், ‘குறைந்த எண்ணிக்கையா, அதிக எண்ணிக்கையா என்பது முக்கியமல்ல. எண்ணிக்கையா லட்சியமா என்றால், லட்சியம்தான் எங்களுக்கு முக்கியம். எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம் என்ற உத்தேசப் பட்டியலை தி.மு.கவிடம் அளித்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: