கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சார்பில் கணுவாய் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சியினர் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்து வேளாண் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் இருப்பதாகவும் அதைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை கணுவாய் பகுதியில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு ஆதரவளித்த அதிமுக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Also read: வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக நீதிமன்றத்தை நாடும் - மு.க. ஸ்டாலின்
கோவை மேற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் தலைமையில், விவசாயி வேடம் அணிந்து மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்து திமுக கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.