ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெட்ரோல் டீசல் கேஸ் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது - அர்ஜூன் சம்பத்

பெட்ரோல் டீசல் கேஸ் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது - அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

இந்தியாவில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வுக்கு காரணம் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் அவரது கூட்டணி கட்சியினரும் தான் என நெல்லையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய  வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 60 இடங்களில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் இந்து மக்கள் கட்சி போட்டியிடாத இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

  தமிழகத்தில் திமுகவினர் தமிழ் சமூகத்தையும் தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தி வருகின்றனர் எனவும் தமிழக முதல்வரின் தாயாரை திமுகவினர் இழிவுபடுத்தி பேசியது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.  நெல்லை மாவட்டம் தச்சநல்லூர்  மணிமூர்த்திஸ்வரத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி கோவில் அருகே கல்லறை தோட்டமாக ஆக்கிரமிக்க படுவதை கண்டித்து போராடி சிறை சென்ற இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் உடையார் சிறையில் இருந்தபடியே பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கிறிஸ்துவ மிஷனரிகளின் ஆதிக்கத்தின் காரணமாக தேர்தல் அதிகாரிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளனர் என தெரிவித்தார்.

  பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு என்பவரின் அழுத்தம் காரணமாக கல்லறைத் தோட்ட இடிப்பு வழக்கில் 9 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீது தனி வழக்கு பதிந்து நஷ்ட ஈடாக ரூபாய் 30 லட்சம் கேட்டுள்ளனர். கல்லறை தோட்ட இடிப்பு விவகாரத்தில்  சிறுபான்மையினரை ஒன்றிணைத்து போராட செய்தது தற்போதைய பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு இவரை எதிர்த்து இந்து மக்கள் கட்சி பிரச்சாரம் செய்யும் அதிமுகவில் சீட்டு தரவில்லை என அதிருப்தியில் சுயேட்சையாக பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைமை கழக பேச்சாளர் சடகோபனுக்கு இந்து மக்கள் கட்சி  ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ய உள்ளது.

  தச்சநல்லூர் உச்சிஷ்ட கணபதி கோவில் அருகே உள்ள கல்லறைத் தோட்டம் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபி.சி.ஐ.டி விசாரணை கோரி காவல்துறை இயக்குனரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

  தென் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு தடையாக கிறிஸ்துவ அமைப்புகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகிறது இந்து கோவில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

  மேலும்  இந்தியாவில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவருடைய கூட்டணிக் கட்சிகளும் தான் காரணம் என தெரிவித்த அவர் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்தபோது திமுகவின் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

  - நெல்லை செய்தியாளர் ஐயப்பன்

  Published by:Arun
  First published:

  Tags: Arjun Sampath, Tirunelveli, TN Assembly Election 2021