ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எந்த அண்ணாமலை நின்றாலும் தோற்பது உறுதிதான் - திருநாவுக்கரசர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எந்த அண்ணாமலை நின்றாலும் தோற்பது உறுதிதான் - திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

Erode Bypoll: தற்போதுள்ள திமுக கூட்டணி பலமாக இருப்பதால் இந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் - திருநாவுக்கரசர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டுமின்றி வேறு பெரிய அண்ணாமலை நின்றாலும் தோற்பது உறுதிதான் என அறந்தாங்கியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பொன்சிறுவரை ஸ்ரீதர்மசாஸ்தா கோவில் அருகில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எம்.பி.திருநாவுக்கரசர்," ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளெல்லாம் பார்வையாளர் தினேஷ் குண்டுராவிடம் கருத்து தெரிவித்தோம். அதன்படி அவரையே வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தற்போதுள்ள திமுக கூட்டணி பலமாக இருப்பதால் இந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை முதலில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர், அதிமுகவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிமுகவுக்குள் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் நீடிக்கிறது. அதிமுகவைப் பொருத்தவரை 3, 4 கூறுகளாக உடைந்துள்ளது. எந்த சின்னத்தில் போட்டியிடுவது போன்ற குழப்பம் உள்ளது. பாஜகவும் போட்டியிட வலியுறுத்துகிறது. இந்த சூழலில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் வெற்றி பெறும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டுமின்றி வேறு பெரிய அண்ணாமலை நின்றாலும் தோற்பது உறுதி என்று தெரிவித்தார்.  

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி உருவாக்குவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. தற்போதே அதை உருவாக்க முடியாது. எதிர்காலத்தில் தொகுதி வரையறை செய்யும்போது இக்கோரிக்கை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமத்தில் பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். அனைவரும் ஒன்றுமையாகத்தான் இருந்து வருகின்றனர். அங்கு யாரோ ஒருவர் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவை கலந்துள்ளார். இது யாரென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என ஏற்கெனவே மத்திய அரசை வலியுறுத்தி உள்ளேன். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. விரைவில் கொண்டுவர முயற்சி செய்வேன் என்றார்.

First published:

Tags: Erode Bypoll