• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் - சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உறுதி

சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் - சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உறுதி

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஎம்.

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஎம்.

வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியே தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

  • Share this:
    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எந்தக் கட்சியுடன் இணைந்து களம் காண்பது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மும்முரமாக காய் நகர்த்தி வரும் நிலையில், எதிர்வரும் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணியே தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதை ஆதரித்துப் பேசிய அவர், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால் அங்கும் தமிழக அரசு உரிய அழுத்தம் தந்து வாதிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    Also read: சிறுவனின் நுரையீரலில் சிக்கிய பல்; பல நாள் போராட்டத்துக்குப் பிறகு அகற்றம்

    தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக பொதுபோக்குவரத்துக்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு, வருவாயைக் கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டிருப்பதாக சாடினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: