முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பண்ருட்டி தொகுதியில் உதயசூரியனில் போட்டியிடும் வேல்முருகன்

பண்ருட்டி தொகுதியில் உதயசூரியனில் போட்டியிடும் வேல்முருகன்

தி.வேல்முருகன்

தி.வேல்முருகன்

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

  • Last Updated :

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் தங்களது ஆதரவை திமுகவிற்கு அளித்தனர். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி இறுதி செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “திமுக - தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தத்தின் படி பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடுகின்றேன்.பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களிக்கான பிரச்னைகளை சட்டமன்றத்தில் வாதாடுவேன்.

பண்ருட்டி தொகுதி மக்கள் எங்களுக்கான வெற்றியை பெற்று தரவேண்டும். அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகி கொண்டு இருக்கிறது.

top videos

    திமுக கூட்டணி நாளுக்கு நாள் பலமாகிக் கொண்டு இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் பெறாத வெற்றியை திமுக பெறும். திமுக கூட்டணியை எந்த கொம்பனாலும் வெல்ல முடியாது. கமல் யாரோ எழுதிக் கொடுப்பதை பேசிக்கொண்டிருக்கிறார். நிழல் என்பது வேறு நிஜம் என்பது வேறு” இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: DMK Alliance, TN Assembly Election 2021, Velmurugan