Home /News /tamil-nadu /

சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை

Tamil Nadu Assembly : ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆளுநர் உரைக்கு அல்ல, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையை வெளிநடப்பு செய்கிறோம் என சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது ஆளுநர் உரையாற்றினார். இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    வெளிநடப்பு செய்த விசிக எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீண்ட நாட்களாக ஆளுநர் மாளிகையில் தமிழக அரசின் நீட் ரத்து குறித்த கோப்பை ஆளுநர் மாளிகை கிடப்பில் வைத்துள்ளது.

    தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆளுநர் உரைக்கு அல்ல, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையை வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறினார்.

    இந்நிலையில், ஆளுநர் உரையில், பொதுவாக நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே தொழில் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீர் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்ற என இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    மாநிலத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் தரத்தையும் மேம்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது கலை மற்றும் அறிவியல் பொறியியல் கல்லூரிகள் அனைத்து பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களும் மாணவர்களும் பயனடையும் வகையில் உயர்தர தகவல் தொழில்நுட்ப தளங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    Sinthanai Selvan VCK


    Must Read : இந்தியாவில் டெல்டா அலை போல் ஓமைக்ரான் ஜனவரியில் உச்சம் பெறும்; உலகம் முழுதும் 300 கோடி பேரை பாதிக்கும்- அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை

    நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: RN Ravi, TN Assembly, VCK

    அடுத்த செய்தி