• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

  • Share this:
    மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று, அமைதியான முறையில் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றன. அதன்படி, வீட்டின் முன்பு நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி போராடவுள்ளனர்.

    கடந்த மாதம் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. அந்த கூட்டத்தில், மத்திய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

    அப்போது, மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு மாநிலம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது.

    அதன்படி, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    Must Read : மத்திய அரசு போதிய தடுப்பூசி வழங்கியிருந்தால் தற்போது தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கும்: மா.சுப்பிரமணியன்

    கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: