ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்... திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பரபரப்பு அறிக்கை!

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்... திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பரபரப்பு அறிக்கை!

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத கருத்துகளை பேசுவது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ள திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

  ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

  அதில்,  சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள் மற்றும் திருக்குறள் குறித்து ஆளுநர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன என விமர்சிக்கப்பட்டுள்ளது .

  ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத கருத்துகளை பேசுவது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

  இதையும் படிங்க | ”நம் தேசத்திற்காக தேவர் ஆற்றிய பங்கு தலைசிறந்தது”- பிரதமர் மோடி ட்வீட்

  எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும், அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல என நாட்டின் மன்னராக தன்னை நினைத்துக் கொண்டு ஆளுநர் பேசுகிறார் என கூறியுள்ள திமுக கூட்டணி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உலக வரலாறும் தெரியவில்லை, இந்திய அரசியலமைப்புச் சட்டமும் தெரியவில்லை என சாடியுள்ளது.

  ஒரு மதத்துக்கு வக்காலத்து வாங்குபவராக ஆளுநர் தன்னைக் காட்டிக் கொள்கிறார் எனவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசுவதையும், கருத்து சொல்வதையும் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

  அனைத்தும் தெரிந்தே, வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் பேசுகிறார் என குற்றம் சாட்டியுள்ள திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள், தற்போது இருப்பதைவிட பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜக தலைமையை மகிழ்விக்க ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படிப் பேசுவதாக இருந்தால், பதவி விலகி விட்டு, இதுபோன்ற கருத்துகளைக் கூற வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: DMK Alliance, Governor, RN Ravi