திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? இன்று அறிவிப்பு

தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Web Desk | news18
Updated: March 15, 2019, 7:36 AM IST
திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? இன்று அறிவிப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Web Desk | news18
Updated: March 15, 2019, 7:36 AM IST
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தபோதும், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டு வந்தது. தற்போது அவை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் அதன் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

திமுக உத்தேச பட்டியல்

அதன்படி, காங்கிரசுக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தேனி, சேலம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தனி தொகுதிகளான விழுப்புரம், சிதம்பரமும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதிமுகவுக்கு ஈரோடு தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...
திமுகவை பொறுத்தவரை தலைநகரில் தென்சென்னை, மத்தியசென்னை, வடசென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், அரக்கோணம், ஆரணி, திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளிலும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

இதுதவிர, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளிலும் திமுகவே களம் காண உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளதாகவும், அதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.

தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Also see... மைக்செட் மணிமாறன் 14-03-2018 
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...