Home /News /tamil-nadu /

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி: முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் தந்த மிகச் சிறந்த பாராட்டுப் பத்திரம்: கனிமொழி

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி: முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் தந்த மிகச் சிறந்த பாராட்டுப் பத்திரம்: கனிமொழி

தூத்துக்குடியில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தரக்கூடியது என்றார்.

தூத்துக்குடியில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தரக்கூடியது என்றார்.

தூத்துக்குடியில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தரக்கூடியது என்றார்.

    தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது இது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் தந்த மிகச் சிறந்த பாராட்டுபத்திரம் - கனிமொழி எம்பி

    தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர் நகராட்சி, கோவில்பட்டி நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகள்  உள்ளிட்டவைகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் நாடாளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்றவர்களை கனிமொழி எம்.பி சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தமிழக மக்களுக்கு நன்றி: வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக செயல்படவேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இதைத்தொடர்ந்து கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பிறகு மாநகரிலுள்ள பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க-தேவர், குரூஸ் பர்னாந்து உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்.பி, தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் தந்த மிகச் சிறந்த பாராட்டுப் பத்திரம். தூத்துக்குடியில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தரக்கூடியது.

    இந்த வெற்றி முதல்வா் நல்லாட்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி. எதிர்க்கட்சிகள். பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயன்றனர். ஆனால் மக்களுக்கு தெரியும் யாரால் நல்லாட்சி தர முடியும் என்று மக்களுக்கு தந்து இருக்கக்கூடிய தேர்தல் வாக்குறுதியை முதல்வர் தொடர்ந்து நிறைவேற்றி தந்து இருக்கிறார் என்ற அடிப்படையில் மக்கள் இந்த வெற்றியை தந்துள்ளனர் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா மார்கண்டேயன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற திமுகவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்  - முரளிகணேஷ்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Kanimozhi, Local Body Election 2022

    அடுத்த செய்தி