விபத்தில் சிக்கிய தி.மு.க கூட்டணி வேட்பாளர்!

தமிழகம் முழுவதுமுள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய தி.மு.க கூட்டணி வேட்பாளர்!
கோப்புப் படம்.
  • News18
  • Last Updated: April 17, 2019, 8:37 PM IST
  • Share this:
தி.மு.க கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் சாலை விபத்தில் காயமடைந்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், தி.மு.க கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் விபத்தில் சிக்கினார். திருச்செங்கோடு சென்றுவிட்டு நாமக்கல் திரும்பியபோது, நல்லிப் பாளையம் பாலத்தில் இருந்து நிலை தடுமாறி கார் கீழே விழுந்தது. இதில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, நாமக்கலிலுள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.


Also see:

First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்