பாஜக அரசைக் கண்டித்து 20-ம் தேதி தி.மு.க கூட்டணி கட்சிகள் போராட்டம்

அண்ணா அறிவாலயம்

மத்திய பா.ஜ..க அரசைக் கண்டித்து வரும் 20-ம் தேதி தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க தெரிவித்துள்ளது.

 • Share this:
  தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர் பங்கேற்ற காணொலி கூட்டத்தில் ‘மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டு கேட்பு உள்ளிட்ட மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

  அதன்படி, மத்திய பா.ஜ.க அரசின் செயல்களைக் கண்டித்து தி.மு.க தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20-ம் தேதி அன்று காலை 10 மணி அளவில், அவரவர்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதச்சார்பற்ற - ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த அறிவிப்பு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்,

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: