காஷ்மீர் விவகாரம் குறித்து நேரில் சென்று ஆராய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சிகள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டுமென திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அம்மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் தங்கபாலு, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காஷ்மீரின் உண்மை நிலையறிய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சிகள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.