• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவை திரும்பப் பெறவேண்டும் - திமுக தோழமை கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவை திரும்பப் பெறவேண்டும் - திமுக தோழமை கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மு.க ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்

மு.க ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்

மாநில உரிமைகளுக்கு விரோதமான புதிய சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தோழமை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • Share this:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அதிமுக அரசு கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை தவறாக அளிப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டங்களிலும், கிராமங்களிலும் நோய் பரவலைக் கட்டுப்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா தடுப்பு பணியில் உயிர்த் தியாகம் செய்தோரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிதியை தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தோருக்கு இட ஒதுக்கீடுகளை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுற்றுப்புறச் சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை மறுவகைப்படுத்தி அதனை சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லா பட்டியலில் சேர்த்ததுடன், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை பலவீனப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மாநில உரிமைகளுக்கு விரோதமான புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

Also read... நிரந்தர பணி என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட செவிலியர்கள்... ஒப்பந்தம் அடிப்படையில் தான் நியமித்தோம் என கூறியதால் தர்ணா!

நீட் தேர்வை ரத்துசெய்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: