எல்லையில் போட்ட குண்டைப் போல திமுகவினர் கலக்கம் - செல்லூர் ராஜு

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பேரவையில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எல்லையில் போட்ட குண்டைப் போல திமுகவினர் கலக்கம் - செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜூ
  • News18
  • Last Updated: March 11, 2019, 12:03 PM IST
  • Share this:
எல்லையில் போட்ட குண்டைப் போல பிரதமர் மற்றும் முதலமைச்சர் அறிவித்துள்ள மூன்று சிறப்பு நிதி உதவி திட்டங்களால் திமுகவினர் கலக்கமடைந்துள்ளதாக, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பேரவையில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “பொங்கலுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் முதல்வர் 1,000 ரூபாய் பரிசு வழங்கினார்.

தற்போது வருமை கோட்டிற்கு உள்ளே இருக்கும் குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.


இந்த மூன்று திட்டங்களும் எல்லையில் போட்ட குண்டை போன்று திமுகவை கலக்கமடைய வைத்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிப் பெறும்” என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மேலும் பார்க்க:
First published: March 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்