9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரச்சார நாளான நேற்று,
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில்
திமுக-
அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் அதிமுகவினர், அந்த வழியாக வந்த அமைச்சர் கீதாஜீவன் காரில் இருந்த கொடிக் கம்பியை சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவியது. 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
தமிழகத்தின் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (9ஆம் தேதி) நடபெற உள்ள நிலையில், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, வள்ளியூர், ராதாபுரம் மற்றும் களக்காடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை திசையன்விளை யூனியனுக்கு கரைச்சுத்துபுதூர் கிராமத்தில் பிரசாரத்தை நிறைவு செய்ய திமுகவினரும் திட்டமிட்டு காவல்துறையில் அனுமதி பெற்றனர். அங்பே அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கீதாஜீவன் உள்ளிடோர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிமுகவின், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் தலைமையில் பிரசார கூட்டத்திற்கு கரைச்சுத்துபுதூர் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக அவர்களும் போலீசாரின் அனுமதியை பெற்றிருந்தனர். ஒரே ஊரில் அருகே அதிமுகவினரும், திமுகவினரும் கூட்டமும் நடத்த திட்டமிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
இறுதிக்கட்ட பிரச்சார கூட்டத்தை முதலிலேயே முடித்துக் கொண்ட திமுக வினரின் வாகனங்கள், அதிமுகவினர் கூட்டம் நடத்திய இடம் வழியாக சென்றன. அப்போது திமுகவைச் சேர்ந்த ஒருவர், நேரம் முடிந்துவிட்டது கூட்டத்தி முடித்துக் கொள்ளுங்கள் என்று அதிமுகவினரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கூட்டம் முடிந்த பின்னர் திசையன்விளை மார்க்கெட் பகுதியில் இரு தரப்பினரும் திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அங்கே திமுக பிரமுகர் ஒருவர் அங்கிருந்த பெண்களிடம் உரக்கப்பேசி, அங்கிருந்து கலைந்து செல்ல வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர், அந்த வழியாக வந்த அமைச்சர் கீதாஜீவன் காரில் இருந்த கொடிக் கம்பியை சேதப்படுத்தியுள்ளனர்.
அப்போது, அமைச்சரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக திமுக மாணவரணியைச் சேர்ந்த நல்லகண்ணு என்பவர் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
Must Read : இன்னும் 9 நாள் தான் இருக்கு... சசிகலாவின் அதிரடி திட்டம்!
இந்நிலையில், அதிமுக வைச் சேர்ந்த 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.