வேலூர் மக்களவை இடைத்தேர்தல் - திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம் போட்டி

news18
Updated: July 6, 2019, 12:40 PM IST
வேலூர் மக்களவை இடைத்தேர்தல் - திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம் போட்டி
ஏ.சி சண்முகம் | கதிர் ஆனந்த்
news18
Updated: July 6, 2019, 12:40 PM IST
வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர்.

மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம் போட்டியிட்ட நிலையில் தேர்தல் ரத்தானது.

திமுக பொருளாளர் துரை முருகனுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான குடோனில் ரூ.11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் முன்னர் களமிறக்கப்பட்ட அதே வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...