வேட்புமனு தாக்கல் செய்யும்போது கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட திமுக -  அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்

கைகுலுக்கிக் கொள்ளும் வேட்பாளர்கள்

தஞ்சாவூரில் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி மரியாதை செய்துகொண்டனர்.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியான பாலசந்தரிடம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜ் கூட்டணிக் கட்சியினருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை மேளதாளங்கள் முழங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து பேரணியாக சென்று சார் ஆட்சியர் பாலசந்தரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்பொழுது எதிரும் புதிருமாக உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது அ.தி.மு.க கூட்டணியில் த.மா.க வேட்பாளர் ரெங்கராஜ் மற்றும் தி.மு.க வேட்பாளர அண்ணாதுரையும் நேரில் சந்தித்துக்கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: