உள்ளாட்சித் தேர்தலில் இருப்பை தக்கவைத்த தேமுதிக..!

உள்ளாட்சித் தேர்தலில் இருப்பை தக்கவைத்த தேமுதிக..!
விஜயகாந்த்
  • Share this:
தமிழக அரசியல் களத்தில் காணாமல் போய்விட்டதாக கருதப்பட்ட தேமுதிக, நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 94 ஒன்றியங்களில் வெற்றி பெற்று ஐந்தாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

விஜயகாந்த் ஆக்டிவாக இல்லை... அவருக்கு இருந்த மவுசு போய்விட்டது. தேமுதிக தேய்பிறையாகி விட்டது என பலர் கூறிவந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனது இருப்பை வெளிப்படுத்தியுள்ளது தேமுதிக

விஜயகாந்த் என்ற ஒற்றை ஆளுமையை வைத்து 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிகவுக்கு, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரும் ஆதரவை கொடுத்தனர். அதன் வெளிப்பாடாக, அதிமுக, திமுக என இருபெரும் கட்சிகளுக்கு எதிராக தனித்து களம் கண்ட தேமுதிக அந்த தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளை பெற்ற தேமுதிக, 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது.


அந்த தேர்தலில் 26 இடங்களில் தேமுதிக வெற்றிபெற்றதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்ற விஜயகாந்த், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடுத்த முடிவு, தேமுதிகவுக்கு சரிவை கொடுத்தது. அதன்பிறகு விஜயகாந்தின் உடல்நலமும் மோசமாகிவிட்டதால், அவரை மட்டுமே நம்பியிருந்த தேமுதிகவுக்கு அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் அடிமேல் அடி விழுந்தது

இனி தேமுதிக காணாமல் போய்விடும் என்ற பலரும் நினைத்த நிலையில், அதை பொய்யாக்கியுள்ளது ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய தேமுதிக, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 94 இடங்களில் வென்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading