மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து ஜூலை 27ல் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வருகின்ற 27ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதையும் வாசிக்க: போலியான தனியார் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மற்ற மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாவட்டமாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு, கட்சியின் தலைமை கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: இலவச ஐஏஎஸ் பயிற்சி: சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு 1 கோடியே 67 லட்சம் ரூபாய் விடுவிப்பு
முன்னனதாக, பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், பால், தயிர், உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை அறை வாடகை, மருத்துவ உபகரணங்கள் என பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய அத்தியாவசிய பொருட்கள் மீதும் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது. இதற்கிடையே, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
இருப்பினும், மாநிலத்தில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.