வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிடும் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற
மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக
சென்னை உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசயல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனால், வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பறிக்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பாமக ஓயாது - ராமதாஸ்
அதேவேளையில், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று மக்கள் நீதி மய்யம், அமமுக போன்ற கட்சிகள் விமர்சித்தன. வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது; இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன என்று கமல் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வன்னிய சமூக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்து, அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.