தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்...

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

கும்மிடிப்பூண்டி, திருத்தணி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்

 • Share this:
   அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவர் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் அவரது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா போட்டியிடுகிறார்.


  இதை தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். கும்மிடிப்பூண்டி தொகுதியில்  தேமுதிக வேட்பாளர் டில்லி மற்றும் திருத்தணி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்காக விஜயகாந்த் இன்று வாக்கு சேகரிக்கிறார்.


  அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் அவர் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  விஜயகாந்தின் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தே.மு.தி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  மேலும் படிக்க... மோடியா?  இந்த தாடியா? - கமல்ஹாசன் கேள்வி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: