17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிக: தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய விஜயகாந்த்!

விஜயகாந்த்

சிகிச்சை முடிந்து துபாயில் இருந்து அண்மையில் விஜயகாந்த் தமிழகம் திரும்பினார். இதனால் தேமுதிகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

 • Share this:
  தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சி  இன்று தனது 17வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தோல்வி என்பது சரிவு தானே தவிர வீழ்ச்சியல்ல என்று தெரிவித்துள்ளார்.

  கடந்த 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை  விஜயகாந்த் தொடங்கினார். லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவே தான் கட்சி தொடங்கியதாகவும் மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி என தொடர்ந்து கூறி வந்த விஜயகாந்த், ஆறே ஆண்டுகளில் எதிர்க்கட்சி என்னும் அந்தஸ்துக்கு தேமுதிகவை உயர்த்தினார்.

  2011ம் சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்த  தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு  29 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி என்னும் அந்தஸ்துக்கு தேமுதிக உயர்ந்தது.  அதன்பின்னர், தவறான கூட்டணி அமைத்ததாலும் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் அக்கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியது.

  தற்போது, சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற விஜயகாந்த், சத்ரியன் திரைப்படத்தை செவிலியர்களுடன் பார்க்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகமூட்டியது. இதேபோல், சிகிச்சை முடிந்து துபாயில் இருந்து அண்மையில் விஜயகாந்த் தமிழகம் திரும்பினார். இதனால் தேமுதிகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  மேலும் படிக்க: மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களாக கனிமொழி, ராஜேஷ்குமார் அறிவிப்பு!
  இந்நிலையில், தேமுதிக இன்று தனது 17வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையெடுத்து கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “ தே.மு.தி.க. தொடங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 17-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
  தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல. எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தே.மு.தி.க. பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

  இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளின் சுவரொட்டி, பேனர்கள் அகற்றம்


  தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில், விஜயகாந்தின் இந்த பதிவு அவரது கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: