நாடாளுமன்ற தேர்தல்போல் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவிற்கு தேவையான இடங்களை கேட்டுப் பெறுவோம் எனவும், அதிமுக தேமுதிகவிற்கான இடங்களை தர தயாராக இருப்பதாகவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
கூட்டத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் கட்சிக்காக பாடுபட்ட மாவட்ட செயலாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவிற்கு தேவையான இடங்களை, கூட்டணி கட்சியிடம் இருந்து கேட்டு பெற குழு அமைக்கப்படும்.
அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி தொடரவேண்டும் என்பது மாவட்ட செயலாளர்களின் விருப்பம். உள்ளாட்சி தேர்தலில் 15 மாநகராட்சியில் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
.நாடாளுமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் கூட்டணியில் சேர்ந்ததால், கூட்டணி தர்மத்திற்காக குறைந்த இடங்களை பெற்று கொண்டோம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை நிச்சயம் கேட்டு பெறுவோம். வெகு விரைவில் கம்பீரமான பேச்சுதான் கூடிய நடை போட்டு விஜயகாந்த் மீண்டும் வருவார் என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.