அதிமுக - தேமுதிக கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், நமது முதல்வர் விஜயகாந்த் என்று கூறியுள்ளார். இதனால், கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடன் நேற்று இரவு அமைச்சர் தங்கமணி இல்லத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தேமுதிக நிர்வாகிகள் அனகை முருகேசன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தேமுதிக, பாமகவுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் வரை மட்டுமே அளிக்க அதிமுக முன்வந்துள்ளதால் தேமுதிகவினர் இன்று பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது சமுகவலைதள பக்கத்தில், நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்று பதிவிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என்று கருதப்படுகிறது,
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.