தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 20 சீட்டுகளை எதிர்ப்பார்த்தது. ஆனால் அதிமுக தலைமையோ அதற்கு உடன்படவில்லை. எங்களுக்கு உரிய மரியாதை தரவில்லையென்றால் தனித்துப்போட்டி என எச்சரிக்கை விடுத்தது தேமுதிக, அதிமுகவுடனான பேச்சுவார்த்தையின் போதே நமது சின்னம் முரசு, நமது முதல்வர் விஜயகாந்த் என ட்வீட் செய்தார் சுதிஷ்.
அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தே.மு.தி.க கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதனையடுத்து, அ.ம.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது தே.மு.தி.க. இரண்டு கட்சிகளிடையே இழுபறி நீடித்துவந்த நிலையில், இன்று அமமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதி பங்கீடு நிறைவுபெற்ற சில மணி நேரங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தே.மு.தி.க. அதன்படி, விருத்தாச்சலம் தொகுதியில் பிரமேலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் தே.மு.தி.க துணைப் செயலாளர் பார்த்தசாரதியும் போட்டியிடுகின்றனர். தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல, எல்.கே.சுதிஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.