Home /News /tamil-nadu /

நாளை தேசியக் கொடி ஏற்றுகிறார் விஜயகாந்த்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!!

நாளை தேசியக் கொடி ஏற்றுகிறார் விஜயகாந்த்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!!

விஜயகாந்த்

விஜயகாந்த்

உடல் நிலை சரியில்லாமல் அவதியுற்று வரும் விஜயகாந்த், சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    75ஆவது சுதந்திர தின அமுதப்பெரு விழா நாளை விமர்சையாக கொண்டாட உள்ள நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.

    உடல் நிலை சரியில்லாமல் அவதியுற்று வரும் விஜயகாந்த், சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அவரது கட்சி நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினரே கவனித்து வருகிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.

    சில நாட்களுக்கு முன் நீரழிவு பிரச்சனையால்  தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வந்த அவரது புகைப்படம் அனைவரையும் களங்க செய்தது.

    தற்போது நாளை நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 8.30 மணி அளவில் அவர் தேசிய கொடியை ஏற்றுவார் என சமூக வளைதலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக, பகுதி, வட்டம், மகளிர் அணி, சார்பு அணி, தொழிற்சங்கம், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நமது நாட்டுப்பற்றை பறைசாற்றும் வகையில் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல நாட்களாக அதிகம் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத விஜயகாந்த், நாளை தேசியக் கொடியை ஏற்றுவார் என்ற செய்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: DMDK, Independence day, Vijayakanth

    அடுத்த செய்தி