• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி

எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்திற்கு கருப்பு எம்ஜிஆர் என்ற பட்டம் மக்களாக கொடுத்தது, ஜானகி அம்மாள் எம்ஜிஆரின் பிரச்சார வாகனத்தையும் விஜயகாந்திற்குதான் கொடுத்தார் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    விஜயகாந்த்தான் எம்ஜிஆரை குருவாக ஏற்றுக் கொண்டவர். தற்போது எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.

    கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சென்னை மதுரவாயல் மற்றும் போரூரில் தேமுதிகவின் சார்பில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு பிரேமலதா மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    பின்னர் பேசிய அவர் கருப்பு எம்ஜிஆர் என்ற பட்டம் மக்களாக கொடுத்தது, ஜானகி அம்மாள் எம்ஜிஆரின் பிரச்சார வாகனத்தையும் விஜயகாந்திற்கு தான் கொடுத்தார், விஜயகாந்த் தான் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு வருடம்தோறும் உதவித்தொகை அளித்து வருகிறார். தற்போது புதிதாக எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடும் கட்சியினர் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

    Also read... நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்

    தேமுதிக இடம்பெறும் அணிதான் வரப்போகும் தேர்தலில் வெற்றிபெறும் அணியாக இருக்கும் என்று பிரேமலதா பேசினார். நாளை மறுநாள் நடைபெற இருக்கும் அதிமுகவின் பிரச்சாரக் கூட்டத்திற்கு தேமுதிகவிற்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: