காற்றை விற்று பணமாக்குபவர் தயாநிதி மாறன் - பிரேமலதா குற்றசாட்டு!

பத்து ஆண்டுகள் மத்திய சென்னை எம்.பி.யாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த தயாநிதி மாறன் தொகுதிக்கு ஏதாவது முறையில் நல்லது செய்திருக்கிறாரா? என கேள்வி எழுப்பிய பிரேமலதா, அலைக்கற்றை ஊழலும், தன் மீது 440 ஊழல் வழக்குகளும் வைத்திருப்பது தான் தயாநிதி செய்த ஒரே சாதனை எனவும் கூறினார்.

news18
Updated: April 16, 2019, 1:39 PM IST
காற்றை விற்று பணமாக்குபவர் தயாநிதி மாறன் - பிரேமலதா குற்றசாட்டு!
பிரேமலதா விஜயகாந்த்
news18
Updated: April 16, 2019, 1:39 PM IST
மத்திய சென்னையின் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் காற்றை விற்று பணமாக்குபவர் என்று பிரேமலதா விமர்சித்துள்ளார்.

மத்திய சென்னை தொகுதியில் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வெற்றி வேட்பாளரும், கடுமையான உழைப்பாளியுமான சாம்பால் அவர்களுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அங்கிருந்த மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது பேசிய அவர், மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் சாம் பால் கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்தவர் என்றும் அதே போல் கடுமையாக உழைத்து கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி மத்திய சென்னை தொகுதியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவார் என உறுதி அளித்தார்.

இதற்கு முன் பத்து ஆண்டுகள் மத்திய சென்னை எம்.பி.யாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த தயாநிதி மாறன் தொகுதிக்கு ஏதாவது முறையில் நல்லது செய்திருக்கிறாரா? என கேள்வி எழுப்பிய அவர், அலைக்கற்றை ஊழலும், தன் மீது 440 ஊழல் வழக்குகளும் வைத்திருப்பது தான் தயாநிதி செய்த ஒரே சாதனை எனவும் கூறினார்.

கே.டி.பிரதர்ஸுக்கு எதிராக சாம் பாலுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் தர்ம அடியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொள்ளை அடிப்பவர்களுக்கு உங்கள் வாக்கா? உழைப்பால் உயர்ந்தவருக்கு உங்கள் வாக்கா? என்பதை மக்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பிரேமலதா பேசினார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...