ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தேமுதிக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பாக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்ட 77 பேர் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்கள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப் பட்டுவாடா, குக்கர், பட்டுப்புடவை, வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியினர் வழங்கி வருவதாக இரு கட்சிகளும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகளும், திமுக, அதிமுகவினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டு அதிகளவில் குவிந்து வந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி புகார் மனுக்கள் எதுவும் வரவில்லை என்று அண்மையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் அதிக அளவில் பணப்பட்டுவடா உள்ளிட்ட விதி மீறல்கள் நடப்பதாக கூறி தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் சத்யபிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு அளவில்லாமல் பணம் பட்டுவாடா நடைபெற்றுவருவதாக குற்றஞ்சாட்டிய தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்று வருவதாக கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chief Election Commissioner, DMDK, Erode East Constituency