தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் பா.மதிவாணன் திமுகவில் இணைந்தார்...!

தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் பா.மதிவாணன் திமுகவில் இணைந்தார்...!

பா.மதிவாணன் மற்றும் ஸ்டாலின்

தேமுதிக கட்சியில் நடைபெறக் கூடிய எந்த ஒரு செயல்பாடும் கட்சித் தலைவரான விஜயகாந்திற்கு தெரிந்து நடக்கவில்லை என்று தனக்கு தெரிவதாக மதிவாணன் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிவாணன் திமுகவில் இணைந்து கொண்டார். அப்போது வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, செய்தி தொடர்பு மாநில இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிவாணன்,
வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளதாகவும், விரைவில் வடசென்னை மாவட்ட தேமுதிக கட்சி தொண்டர்கள் திமுகவில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நோக்கம் திசை மாறிய நிலையில், தற்போது அதிலிருந்து வெளியேறி இருப்பதாக கூறினார். கட்சி தொடங்கப்பட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல நிலையில் இருந்ததாகவும், தற்போது கட்சியில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் கட்சித் தலைவரான விஜயகாந்த்க்கு தெரியுமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் திமுகவில் இணைந்து உள்ளதாக தெரிவித்தார்.

Also read... கொரோனா ஊரடங்கில் ரேசனில் கூடுதல் அரசி வழங்கியது, எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ஊழல்- முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு!

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரிக்கையை கூட்டணிக்காக முன்வைக்காமல், 41 சீட் கொடுத்தால் மட்டும் கூட்டணி வைப்போம் என சொல்வதிலிருந்து தேமுதிக கட்சி நிலை தெரிகிறது என தெரிவித்தார். அதிருப்தியில் கட்சி உள்ள நிர்வாகிகள் இருப்பதாகும், இது ஒரு தொடக்கம் எனவும், வரும் நாட்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் திமுகவில் சேருவார்கள் எனவும் தெரிவித்தார்.

தேமுதிக கட்சியில் நடைபெறக் கூடிய எந்த ஒரு செயல்பாடும் கட்சித் தலைவரான விஜயகாந்திற்கு தெரிந்து நடக்கவில்லை என்று தனக்கு தெரிவதாக கூறினார். தேமுதிக கட்சி ஒரு குடும்ப கட்சியாகவே மாறி விட்டதாக குற்றம்சாட்டினார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: