தேமுதிக தொண்டர்கள் எழுச்சியாக உள்ளதை பார்க்க முடிகிறது - விஜய பிரபாகரன்

விஜய பிரபாகரன்

"வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உதவிகளை இன்னும் விரைவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்"

 • News18
 • Last Updated :
 • Share this:
  விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். அவர் சரியான நேரத்தில் வெளியே வருவார். தமிழக அரசு முன்பை விட சிறப்பாக செயல்படுகிறது என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சேலம் புறநகர் மேற்கு, கிழக்கு மாவட்டங்களில் தலைமை அலுவலகம் திறப்பு விழா சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.

  இதில் கலந்துகொண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தேமுதிக கட்சி நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறேன். தொண்டர்கள் எழுச்சியாக உள்ளதை பார்க்க முடிகிறது.

  விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். அவர் சரியான நேரத்தில் வெளியே வருவார். தமிழக அரசு முன்பை விட சிறப்பாக செயல்படுகிறது.

  வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உதவிகளை இன்னும் விரைவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

  நாளை கோவை , நீலகிரி மாவட்டங்களில், நேரில் எங்கள் கட்சியினருடன் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளேன்” என்று தெரிவித்தார்.

  Published by:Sankar
  First published: