விஜயகாந்த நலமுடன் இருக்கிறார்... சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

 • Share this:
  தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் இருந்ததால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

  விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தீயாய் பரவ கட்சி தொண்டர்கள் கலக்கம் அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக தேமுதிக தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாள்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா தொற்று காலத்தில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கட்சி தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியானது தொண்டர்கள் நிம்மதியடைந்தனர். விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது கேப்டன் விரைவில் வீடு திரும்புவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில்மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: