ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புத்தாண்டில் தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

புத்தாண்டில் தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆங்கில புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அந்த கட்சி தலைமை அறிவித்துள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு எதிராக அரசியல் களத்தில் கலக்கிய விஜயகாந்த், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றியை ருசித்த நிலையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் கணிசமான வாக்குகளை பெற்றார்.

முதல் தேர்தலிலேயே (2006-ம் ஆண்டு) 10 சதவீத வாக்குகளை பெற்ற தே.மு.தி.க. பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலையும் (2009-ம் ஆண்டில்) தனித்தே சந்தித்தார். இந்த தேர்தலிலும் தே.மு.தி.க. பெருவாரியான ஓட்டுகளை பெற்றது. 9-ல் இருந்து 10 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலிலும் கிடைத்தன. மேலும் அடுத்தடுத்து தேர்தலில் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்த கட்சியின் வாக்கு வங்கியும் பாதியாக குறைந்தது.

இதனையடுத்து விஜயகாந்தின் உடல்நிலை பாதித்த  நிலையில் அந்த கட்சியில் இருந்த பெரும்பாலனோர் மாற்று கட்சியில் இணைந்தனர். மேலும் அவரது உடல்நிலையில் அவர் பொதுவெளியிலும் வெளிப்படாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஒவ்வொரு புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களை சந்தித்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தொண்டர்களை சந்திக்கவுள்ளதாகவும் தொண்டர்கள் விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

First published:

Tags: DMDK, Vijayakanth