Home /News /tamil-nadu /

மின் கட்டணத்துக்கு மறைமுகமாக ஜிஎஸ்டி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

மின் கட்டணத்துக்கு மறைமுகமாக ஜிஎஸ்டி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

விஜயகாந்த்

விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோலியப் பொருட்களும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் மின் கட்டணத்திற்கு மறைமுகமாக ஜிஎஸ்டி வரி சேர்க்கப்பட்டிருப்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து  செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக மக்கள் மின் கட்டணத்தை ஏற்கனவே அதிக அளவில் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரியை மறைமுகமாக மின் கட்டணத்தில் சேர்த்திருப்பது மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது மின்கட்டண உயர்வுக்கு மிகப் பெரிய அடித்தளமாக அமைந்துள்ளது.

    ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி வரியை சேர்த்திருப்பது பற்றி மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் மின் கட்டணம் அதிகரிப்பதோடு, அதனுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்த்துள்ளதால், மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்வதோடு, இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது; தற்கொலைகள் அதிகரித்து விட்டன: அன்புமணி ராமதாஸ்

    Published by:Murugesh M
    First published:

    Tags: DMDK, Electricity bill, Vijayakanth

    அடுத்த செய்தி