தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சிகளில், வார்டு வரையறை பணிகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பது, மறைமுக தேர்தல் மூலமாகவே நடைபெறும். அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்வு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில் அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை கட்சி தொண்டர்களிடம் பெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1-ம் தேதி முதல் 7-ம்தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகியாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.